அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா!!

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா, கல்லூரியின் நிறுவனவரும், தலைவருமான எஸ்.ராமதாஸ் மற்றும் செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன், ஆகியோர் தலைமையிலும்,கல்லூரி இயக்குநர்கள் பிரசாந்த், கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலையிலும், முதல்வர் கோபிநாதன் வரவேற்புரையாற்றுகையில் இவ்விழா நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் பேசுகையில்:- 'தமிழ்நாடு அளவில் அன்னை மிரா கல்லூரி 4வது இடம் பிடித்துள்ளது. கல்லூரியில் படிக்கும் போது ஒழுக்கம் மிக முக்கியம். இதை தவறவிட்டால், திருப்பி மீட்க முடியாது. கல்விதான் மிகப் பெரிய சொத்து, உடலையும், மனதையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண் டும். மனதளவில் சுத்தமாக இருக்க வேண்டும். கல்லூரி வாழக்கை திரும்ப கிடைக்காது. என்னமும், சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும் என பேசினார். இதனைத் தொடர்ந்து, கௌரவ விருந்தினராக திரைப்பட நடிகை ரோகினி, கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்ற வாக்குறுதியை இந்த கல்லூரி வழங்கியுள்ளது. திசை கண்டுபிடிக்க வேண்டும் பருவம் இது. கவன சிதறலை சந்தோஷமாக கொண்டாடி தான் இந்த காலகட்டத்தை கடந்து தான் போக வேண்டும். எந்த துறையை எடுத்து கொண்டாலும், அதற்கு பயிற்சி மிகவும் அவசி யம். உங்களுக்கு என்ன வேணும் என்ற தெளிவு கிடைத்தால், தான் வாழ்க்கையின் திருப்பு முனை இருக்கும். வெற்றியை நோக்கி பயணிக்கும் போது, கிடைக்கும் தோல்விகள் எல்லாம் அனுபவம்தான்' என்றார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில், துணை முதல்வர் சரவணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நிர்வாக அலுவலர். சாண்டில்யன் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!