கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கிய நகர்மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி நெல்லிக்குப்பம் நகரத்தில் Tkm பில்லா பிரதர்ஸ் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதியில் முத்து நகர், திருக்கண்டேஸ்வரத்தில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நேற்று 17.8.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 15000 வழங்கி பாராட்டினார் மற்றும் நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர். மணிவண்ணன் அவர்கள் இரண்டாம் பரிசு ரூபாய் 10000 வழங்கினார் மற்றும் கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக