அரக்கோணத்தில் டவுன்ஹால் புதிய நிர்வாகிகளுக்கு தமிழ் படைப்பாளர்கள் சங்கம் பாராட்டு!!
ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணத்தில் நூற்றாண்டு பழமை கொண்டது தி டவுன் ஹால் சங்கம் இச்சங்கத்தின் 2025-27 வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் டாக்டர் பன்னீர்செல்வம் அணி மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து இச்சங்கத்தின் பொதுகுழு கூட்டம் மற்றும் பதவியேற்பு நடந்து முடிந்தது. அப்போது விழாவில் கலந்து கொண்ட
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்ட பொதுச் செயலாளர் டாக்டர். பன்னீர் செல்வம் மற்றும் தலைவர் ஜீ, கே.பாபுஜிக்கும் பொருளாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழா நடத்த முன் வந்தனர்.
அந்த வகையில் தமிழ்படைப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரும் எழுத்தாளருமான சுந்தர்ராஜ் தலைமையில். திடவுன் ஹால் முன்னாள் Vice president , தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின்
கவுரவ ஆலோசகரமான ஆர். வெங்கட்டரமணன் முன்னிலையில் சங்க. தலைவர் கவிஞர் சீ.மோகன் சால்வை அணிவித்து நிர்வாகிகளுடன் பாராட்டு தெரிவித்தார்.
இதில் தமிழ் படைப்பாளர்கள் சங்க அண்ணாமலை அதிமுக மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் ஷியாம்குமார். ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார் நகரமன்ற உறுப்பினர்கள். சரவணன், பாபு டவுன்ஹால் முன்னாள் விளையாட்டு பொறுப்பாளர். சிவபிரசாத் என்கிற பாபு செயற்குழு உறுப்பினர். சரவணன் இன்ஜினியர் சுரேஷ் உட்பட காமேஷ், சுரேஷ் ஜெய்சங்கர், கமல், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக