நெமிலி அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் கிராமத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு வயது முதியோர் வீட்டிற்கு சென்று, அரிசி, சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது பள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் குணசேகரன், செயலாட்சியர் தமிழ்செல்வி, காசாளர். சீனிவாசன், விற்பனையாளர். ஜெகன், ஒன்றிய குழு உறுப்பினர். சரஸ்வதி பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.


கருத்துகள்
கருத்துரையிடுக