மூப்பனார் பிறந்தநாள் விவசாயி தினமாக இரு இடத்தில் கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் மேற்கு ஒன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மூப்பனார் பிறந்தநாள் விவசாயி தினமாக திருத்தணி சாலை நாகாலம்மன் பஸ் நிலையம் மற்றும் போளூர் கேட் என இரு இடத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அண்ணா ரது உருவப்படம் வைக்கப்பட்டு கொடியேற்றி பச்சை கலர் னத்துண்டு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ஜமுனா ராணி தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பி ஜி மோகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி படத்திற்கு மாலை அணிவித்தார் அரக்கோணம் நகர தலைவரும், முன்னாள் அரக்கோணம் நகர்மன்ற துணைத் தலைவருமான கே வி ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். மாநில இணைச் செயலாளர் ஈ.ஆறுமுகம் மேற்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் துணை தலைவர் ரமேஷ் மற்றும் கிழக்கு தலைவர் எல்.தேவேந்திரன் நெமிலி தலைவர் பி ஆர் ரவி பேச்சாளர் பாலகிருஷ்ணன் உட்படஎன்.கஜேந்திரன் எஸ்.கஜேந்திரன் எஸ்.கோவர்தனன் எஸ்.ரமேஷ் ஜி.ரவீந்திரன் உட்பட 50ற்கு மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக