போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!
தேனி மாவட்டம்,தேனியில் போதை பொருள் மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சமரச மையம் சார்பில் பெரியகுளத்தில் நடந்த இந்த பேரணியை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சங்கர் துவங்கி வைத்தார். நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக