கலெக்டர் நடவடிக்கை எடுக்க சு.ரவி எம்எல்ஏ கோரிக்கை!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் கொட்டி வைப்பது வழக்கம் இதற்கு தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து கணமழை பெய்து வந்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரையோரம் இருந்த பிளாஸ்டிக் குப்பை கள் அடித்து செல்லப்பட்டு கீழ்வெங்கடாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள போர்வெல்களில் அடைத்தது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று கொசஸ்தலை ஆற் றில் கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அரக்கோணம் எம்.எல்.ஏ சு. ரவி பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: நெமிலி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல் படுத்தவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. பாலாற்றின் கிளை ஆறான கொசஸ்தலை ஆற்றில் குப்பைகளை கொட் டிவைத்துள்ளனர். இந்த குப்பைகள் ஆற்றில் கலந்து விவசாய நிலங்களை பாதிப்பது மட்டுமில்லாமல் சய னபுரம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக் கப்பட்டுள்ளது.

கலெக்டர் நெமிலி கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு அட்டூழியம் செய்து வரும் நிலையை நேரில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தவில்லை என்றால் நெமிலி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மிகப்பெரியகணடனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.

அப்போது நகர செயலாளர். செல்வம், பொருளாளர். நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர். முருகன், கவுன்சிலர்கள் சங்கர், பாரதி, நிர்வாகிகள் கார்த்தி, சத்யமூர்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!