திருமால்பூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட திருமால்பூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு முகாமைப் பார்வையிட்டார்.அதைத்தொடர்ந்து  முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


முகாமில் வட்டாட்சியர். ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர். சிவகுமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் மணிவண்ணன், பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர். துலுக்கானம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!