திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்காகவே என்னுடைய நடைபயணம் என ஆவேசமாக பேசினார்! அன்புமணி ராமதாஸ்!!


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டார்.சோளிங்கர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காந்தி சாலை அண்ணா சாலை வாலாஜா சாலை ஆகிய முக்கிய வீதிகளில் வழியாக சென்று சோளிங்கர் கருமாரியம்மன் கோவில் அருகே!.. மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட தலைவர் சம்பத் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசுகையில்..


தமிழ்நாட்டில் பள்ளி குழந்தை முதல் கல்லூரி பெண்கள் வரை பத்திரமாக வீடு திரும்ப வில்லை நான்கு வயது குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை பாலியல் பலாத்காரம் போதைப் பொருட்கள் கடத்தல், கூலிப்படையை வைத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரை ஒரே மாதத்தில்  கொன்றுள்ளார்கள். 


சட்ட ஒழுங்கு சரியில்லை சட்டம் தன் முதல்வர் கையில் உள்ளது அவர் என்ன செய்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை கட்டாயமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்னுடைய நடைபயணம் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம் என பேசினார். இதில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!