ஸ்ரீ நாழிமலை சக்தி விநாயகர் காமாட்சி அம்மன் மண்டல பூஜை!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் டி. சுப்புலாபுரம் அருள்மிகு ஸ்ரீ நாலி மலை சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்வ காமாட்சி அம்மன் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரன் கும்பாபிஷேகம் முடிந்து இன்று 48வது நாள் மண்டல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.  ஒரு மண்டலமும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.  

யாக பூஜை சிறப்பாக நடபெற்று ,புனித நீர் குடம் கோவிலைச்சுற்றி எடுத்து வரப்பட்டது.மூல விக்கிரகங்களுக்கு புனித நீர் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானமும் பெருந்திரளாக வந்த பக்தர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. காஞ்சி காமாட்சிஅம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் போல இங்கு செல்வ காமாட்சியம்மன் சிறப்பாக அருள்பாளித்து வருகிறார். 

கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவில் நிர்வாகி பி. முத்துராமன் அவர்களும்மற்றும் கும்பாபிஷேகக் குழு கமிட்டியாளர்களும் ஊர் பெரியவர்களும் விஸ்வகர்ம சமுதாயம் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்து அம்மனின் அருள் பெற்று அறுசுவை விருந்துண்டு அம்மனின் அருள் பெற்று மகிழ்வுடன் சென்றனர். இன்று மாலையில் குத்துவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!