மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயற்சி!!


வேலூர்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்த காட்பாடி கீழ் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன்  (வயது 40)என்பவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப் படுத்தினர். அருகிலிருந்த மாவட்ட ஆட்சியர்.  இரா.சுப்புலட்சுமி  இ.ஆ.ப.,அதைக் கண்டுகொள்ளாமல் யார் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்கிற ரீதியில் சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு. இன்பராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!