அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் !!


ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில்  மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாப்பேட்டை வட்டம்,முகுந்தராயபுரம் அக்ராவரம்  மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரகுரு பழனி மலை திருக்கோயில் மற்றும் மலையடிவாரம் ஸ்ரீமஹா  கணபதி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழா கோயில் தர்மகர்த்தா அக்ராவரம் கே.பாஸ்கர் தலைமையில்,முன்னாள் ரயில்வே  துறை அமைச்சர் ஆர்.வேலு,திருக்காஞ்சனிகிரி டிரஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலையில்,வாலாஜாப்பேட்டை  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்  ஸ்ரீ முரளிதர சுவாமிகள்,வேலூர் செங்காநத்தம் ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள்  மடாலயம்  ஸ்ரீ பகவதி சித்தர்  ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு  மந்திரங்கள்  ஓத கோயில்  கோபுர  கலசங்களுக்கு  புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம்  செய்தனர். தொடர்ந்து மஹா தீபாரதனை செய்து பக்தர்கள்  மீது புனித  நீர் தெளித்து  அருட்பிரசாதம் வழங்கினர்.

இதையடுத்து அருள்மிகு ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரகுரு  பழனி  மலை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை செயலாளர். சி.மணி எழிலன், பொருளாளர். பி.முரளி, துணை செயலாளர். டி.சந்திரன், துணைத் தலைவர்கள். செளர்தர்ராஜன்,  கே.ஆறுமுகம், துணை செயலாளர். ஏ.எஸ்.ராஜா மற்றும் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!