எடப்பாடியார் சோளிங்கர் வருகை குறித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வருகையை ஒட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர். ஏ. எல். விஜயன் மேற்கு ஒன்றிய செயலாளர். பெல். கார்த்திகேயன் நகர செயலாளர். வாசுஆகியோர்முன்னிலையில் தனியா திருமணமண்டபத்தில் நடைபெற்றது. 

இது சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அமைப்பு செயலாளர். கோ. ஹரி, அரக்கோணம் எம். எல். ஏ அதிமுக எதிர்க்கட்சி துணை கொரடா சு. ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் திமுக பணபலம் வைத்து ஜெயித்து விடலாம் என கனவு காண்கிறது இந்த கனவு பலிக்காது அதிமுக மக்கள் பலம் கொண்டது கட்டாயமாக சோளிங்கர் தொகுதி அதிமுக வெற்றி பெறும் 

சோளிங்கருக்கு திமுக தலைவர். ஸ்டாலின் இல்ல எந்த கட்சித் தலைவரும் வருகைக்கு அருகதை அற்றவர்கள் ஏனென்றால் சோளிங்கத் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் தான் கல்லூரி வட்டாட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டை மாவட்டம் நீதிமன்றம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் அதனால் சோளிங்கருக்கு வருகை தர தகுதி உள்ள ஒரே தலைவர். எடப்பாடி கே. பழனிசாமி தான். 

அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சோளிங்கர் வருகையின் போது 25 ஆயிரம் பேரை நீங்கள் காசு கொடுக்காமல் உண்மை தொண்டை களை கூட்டினால் கட்டாயமாக சோளிங்கர் தொகுதிக்கு அதிமுக சீட் ஒதுக்கிய தீருவார் இதற்கு யாருடைய ரெக்கமண்டேஷன் கிடையாது 

ஆதலால் அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சோளிங்கர் வருகையின் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் வரலாறு காணாத மக்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!