சமூக பகுப்பாய்வு கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு பெரியார் பணி!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கல்லாறு எஸ் ஆர் இ டி  அலுவலகத்தில் சமூக பகுப்பாய்வு கூட்டம் நிர்வாக தலைவர் டாக்டர். பர்ணாட் பாத்திமா வழி கட்டுதலுடன்  நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்ஆர்இடி ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மா.கி எட்வின் பிரபாகரன் பங்கேற்று பேசினார் அவர் பேசிய போது

ஈ .வே. ராமசாமி எனும் பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார் இவர் மிக பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் இவரது நடவடிக்கைகள் அனைத்தும்  நம்பகத்தன்மை கொண்டதாகும் அதனால் கடவுளுக்கு எதிராக செயல்பட்டாலும் நம்ப தன்மை கொண்டவரால் இவரிடம் கோவிலில் நிர்வாகம்  கொடுக்கபட்டது. சிறப்பாக நடத்தியவர் இவரது வாழ்க்கை துணைவியாக ஏழை குடும்பத்தில் பிறந்த

நாகமணியம்மையாரை தாய் தந்தை எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் இளம் விதவை திருமணத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நடத்தி காட்டினார் இந்த நிலையில் . காசிக்குச் சென்றார் அங்கு பிராமனர்கள் மத்தியில்  அவமானங்களை சந்தித்தார் பிறகு ஆந்திர மாநிலம் வந்தார் அங்கு அவருக்கு காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து கேரளா மாநிலம் வைக்கம் பிரச்சனை தீர்க்க செல்ல காந்தியடிகளால் அனுப்பி வைக்கபட்டார். அங்கு இன வேற்றுமை ஒழித்தார் பின்னர் தமிழகம் வந்தார் இங்கு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் என பேசினரர் 50 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் எஸ்ஆர் இடி நிர்வாகி சரஸ்வதி நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!