அரக்கோணம்: அம்மனூர் அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆண்டரசன் பேட்டையில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வருகிற 10ம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கிறது. மூன்று தினங்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான 08-08-2025 வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் பந்தக்கால் நடுதலும், 09-08-2025 சனிக் கிழமை மாலை 5.00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை திரவிய ஹோமம், பூர்ணாஹூதி மஹா ஆராதனை பிரசாதம் விநியோகமும் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை | 10-08-2025 காலை 7.00 மணிமுதல் கன்னியா பூஜை, பிரம்மசாரி பூஜை, கோபுர பூஜை, சுமங்கலி பூஜை, யாத்ரா தானம், சங்கல்ப ஹோமம் 2-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, மஹா ஆரத்தி காலை 10.00 மணிக்கு கும்ப கலச புறம்பாடு விமான கலசம் & விக்கிரகங்கள் கும்பாபிஷேகம், ஆரத்தி, பிரசாதம் விநியோகம். நடைபெறும் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இதற்கான ஆன்மீக பணிகளில் அரக்கோணம் V.M.பாஸ்கர் குடும்பத்தினர் V.M.முனிவேலன் குடும்பத்தினர். V.M.சீனிவாசன் குடும்பத்தினர், காஞ்சிபுரம் V.M.R.கிஷன் குடும்பத்தினர். ஈடுபட்டுள்ளனர் எனவே ஆன்மீக பக்தர்கள் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ தர்ம முனீஸ்வர் அருள் பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக