அரக்கோணம் இரட்டை கண் வாராவதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் எடப்பாடியார் பேச்சு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசியதாவது:
அரக்கோணம் நகரமே அதிருகின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அடுத்தாண்டு நடைபெறும் சட்ட சபை பொது தேர்தலில் அரக்கோணம் தொகுதி இப்போதே வெற்றி பெற்றுவிட்டது.இங்கு கூடியிருக்கும் மக்களை பார்த்தால் அதிமுக வெற்றி பெறுவதற்கு நாங் கள் துணை நிற்போம் என்று கூறுவது போல் உள்ளது. அதற்காக நன்றியை தெரி வித்து கொள்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண் டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு கண்டு வருகிறார். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது.
அதிமுக ஆட்சி காலத் 1 தில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள், 7 சட்ட கல்லுாரிகள், 21 பாலி டெக்னிக்குகள், 67 கலை பழனிசாமி உத்தரவாதம்அறிவியல் கல்லுாரிகள், 4 வேளாண்மை கல்லூரிகளை கொண்டு வந்து உயர்கல்வி யில் சாதனைப் படைத்தது.ஆனால் தேர்தலின் போது திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் முதல் கையெ ழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான ரகசியம் எங்களிடம் உள்ளது எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின் இதுவரை அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவில்லை. அவர் அரக்கோணம் வந்தாவது அந்த ரகசியத்தை மக்களிடம் சொல்வாரா. அதிமுக ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தை மக்களின் வசதிக்காக பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக செயல் பட்ட தமிழக போலீசார் இப்போது செயல் இழந்து தொடர்கதையாகிவிட்டது. காணப்படுகின்றனர். தமிழகத்தில் தினந்தோறும் கொலைகள் நடப்பது.
அதிமுக ஆட்சி காலத் தில் கொண்டு வந்த தாலி க்கு தங்கம் திட்டம், மாண வர்களுக்கு லேப்டாப். அம்மா மினி கிளினிக் உள் ளிட்ட ஏழைகளுக்கான திட் டத்தை காழ்ப்புணர்ச்சியால் திமுக முடக்கி விட்டது.மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும்.
இன்றைக்கு புதியதாக கட்சி தொடங்குபவர்கள் கூட நம் தலைவர் எம்ஜிஆர் படத்தோடு தான் துவங்கு கின்றனர். அப்படி நம்மு டைய தலைவர்கள் மக்க ளுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் அப்படிப்பட்ட தலைவர் உருவாக்கிய கட்சி தான் அதிமுக. அதிமுக ஆட்சி வந்தவுடன் அரக்கோ ணம் நகரத்தின் பிரதான கோரிக்கையான இரட்டை கண் தரைப்பாலம் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் பேசினார்.
அப்போது மாவட்ட அரக் செயலாளரும், கோணம் எம்எல்ஏவுமான ரவி, முன்னாள் எம்பி அரி, அரக்கோணம் நகர செயலா ளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் விஜயன்உள்ளிட்டபலர்உடனிருந்தனர்.முன்னதாக பழனி சாமியை வரவேற்கும் வகை யில் மாலை 4 மணி இருந்து கரக்காட்டம், மயிலாட்டம், சென்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக