நெமிலியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உதவி மையத்தில் இலவச ஜெராக்ஸ் !!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சம்பத்துராயன்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இதில் சிறுணமல்லி, நாகவேடு, மேலாந்துரை, கீழாந்துரை உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இந்த நிகழ்விற்கு அரக்கோணம் கோட்டாட்சியர். வெங்கடேசன் தலைமை வகித்தார். நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். நெமிலி பிடிஓ சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த  முகாமிற்கு சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, நலத்திட்டஉதவிகளைவழங்கினார்.முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் அடையாள் அட்டை, கூட்டுறவு வங்கி கடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உதவி மையம் அமைத்து பொது மக்களுக்கு வசதிக்கேற்ப மனுக்கள் பூர்த்தி செய்து, இலவசமாக ஜெராக்ஸ், குடிநீர், கூல்ட்ரிங்ஸ் மற்றும் மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். SGC பெருமாள்,கிழக்கு ஒன்றிய பொருளாளர் புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் நாகவேடு முருகேசன், பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் வினோத், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!