பண்ருட்டியில் நடைபெற்ற கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம்! நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!

 


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகர திமுக சார்பில்    டாக்டர். கலைஞர் அவர்களின் 7 ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று 7.8.2025 காலை 9 மணி அளவில் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  டாக்டர். கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பண்ருட்டி டேனிஷ் மிஷன்  பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருவதிகை உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர மன்ற துணைத் தலைவர். சிவா மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன் நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பரணி சந்தர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர். ராம்குமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை  துணை அமைப்பாளர் சங்கர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர். மகாலிங்கம் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். பாரி நகர துணை செயலாளர். சீனிவாசன் சசிகுமார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். லோகநாதன் மற்றும் வார்டு செயலாளர்கள் முன்னாள் இன்னால் நகர மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் தொமுச நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து சார்பு அணிஉள்ள  நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!