வேலூரில் நடைபெற்ற 79வது சுதந்திரதின விழாவில் செய்தித்துறை பிஆர்ஓ அலுவலக தட்டச்சு பாலாஜிக்கு, ஆட்சியர் சிறந்த பணியாளருக்கான சான்று வழங்கி பாராட்டு!!

வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி மைதானத்தில்  நடைபெற்ற 79வது சுதந்திரதின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர், செய்தித்துறையில் பி.ஆர்.ஓ. அலுவலக தட்டச்சு பாலாஜிக்கு, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி IAS அவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட அளவிலான அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தேசபக்தி மிகு. முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் கருத்து நாளிதழ் சார்பாகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாகவும், மாவட்ட அளவிலான அனைத்து செய்தியாளர்கள் சார்பாகவும் பி ஆர் ஓ அலுவலக தட்டச்சு பாலாஜியின் பணி சிறக்க, பதவி உயர்வு பெற்றிட, மென்மேலும் புகழ் வளர்ந்திட வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!