பண்ருட்டியில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் – தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை!!
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.தேசபக்தி, ஒற்றுமை மற்றும் மக்களின் நம்பிக்கை நிறைந்த இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன், கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை தொடர்ந்து, சமூகத்தில் மிக முக்கிய பங்காற்றும் நமது தூய்மைப் பணியாளர்களுக்கு, புதிய சீருடைகள் மற்றும் தேவையான உபகரணங்களை வழங்கும்நிகழ்வும்நடைபெற்றது.அவர்களுடன் நேரடியாக அமர்ந்து காலை உணவு அருந்தியும், அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டியும் மகிழ்ந்தேன்.
சமூகத்தின் சுகாதாரம், சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி மதிப்பிட முடியாதது.அவர்களுக்கு மரியாதை செலுத்துவது, நம் கடமை மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய அடிப்படையாகும் என சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பண்ருட்டி முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர். சபா. பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் (BDO) மீரா பாபு, பொறியாளர்கள். சங்கர், கல்யாணசுந்தரம், திருநாவுக்கரசு, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலாளர். குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர். சந்தோஷ்குமார், அன்பழகன், வழக்கறிஞர். அரிதாஸ், ஜெகஜீவன்ராம், செல்வம், செழியன், முருகன், மாசிலாமணி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக