பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி 79 ஆவது விடுதலை நாள் விழா! கொண்டாட்டம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசினர்மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் .சு.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று வரவேற்புரையாற்றினார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். வீ. லோகநாதன்,நகர மன்ற உறுப்பினர். முகமது அனிபா அவர்களும், உதவித்திறமை ஆசிரியர்கள். ஹேமலதா, மாலதி , முதுகலை ஆசிரியர்கள். குமார், லக்ஷ்மிகாந்தன், பாரதி முன்னிலை வகித்தனர்.பள்ளி வளர்ச்சி குழு தலைவரும் பண்ருட்டி நகர மன்ற தலைவருமான க. ராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், தொழிலதிபருமான தமிழ்த்திரு.ஜாஹுர் உசேன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார். பள்ளி வளர்ச்சி குழு பொறுப்பாளர்கள் நல்லாசிரியர். ஜெ. பாலச்சந்தர், நகர மன்ற உறுப்பினர். ஷண்முகள்ளிபழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. விழாவின் நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், அன்பழகன், மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக