தணிகைப் போளூரில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்,தணிகைப் போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூபாய். 68 லட்சம்  மதிப்பீட்டிலான மூன்று புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.  நடராஜன் வரவேற்றார். துணைத் தலைவரும் திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான பசுபதி,பொருளாளர் . டில்லி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு  அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர்.  வெங்கடேசன் பூமி பூஜையில் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து அடிக்கல் நாட்டினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.  மோகன் காந்தி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் . மேரி தங்கம்மாள்,  மற்றும். கன்னியப்பரெட்டி,   மனோகரன்,  முனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!