வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் நடைபெற்ற 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!

வேலூர் மாவட்டம்,உலகளவில் புகழ்பெற்ற வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 40ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று சிறப்புரை!!2047ல் இந்திய வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியமானது வி.ஐ.டி. வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் சிறப்புரை!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, உலகளவில் புகழ்பெற்ற வேலூர் விஐடி பல்கலைக்கழகம், அப்துல் கலாம் கட்டிட வளாகம் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் கட்டிட வளாகத்தில், 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா விஐடி தலைவர், வேந்தர் முனைவர். கோ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. 

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கு கல்வியின் வளர்ச்சி மிக முக்கியமானது என வி.ஐ.டி. வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் வலியுறுத்திசிறப்புரையாற்றினார்.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பட்டம் பெரும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 8310 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டங்களும், 2802 பேருக்கு முதுநிலை பட்டங்களும், 451 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. தரவரிசையில் இடம்பிடித்த 203 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. சிறப்பிடம் பிடித்த 68 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. 

தமிழக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், பேரிடர் மேலாண்மை தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.னன்ன்டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் தலைமைச் செயல் அலுவலர் சிவகுமார் சுந்தரம் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாத்பேசியதாவது:இந்தியாவில் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  6% நிதி ஒதுக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது 3% தொகை மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மாநில அரசுகள் கல்விக்கு 75%, மீத தொகையை மத்திய அரசும் செலவிடுகிறது. தமிழகம் 21% நிதியை ஒதுக்கி நாட்டிலேயே கல்வி துறைய முன்னணியில் உள்ளது.

மத்திய அரசு ஆண்டுக்கு தாக்கல் செய்யும் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ரூ.55 லட்சம் கோடியில் 2.5%மட்டுமே கல்விக்கு ஒதுக்கியுள்ளது. நாட்டில் உயர்க் கல்வியில் 4.3 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கையில் உயர்க்கல்வி மாணவர் சேர்க்கைவிகிதத்தை 50% எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த வேண்டும். இதற்காக அதிக வகுப்பறைகள், உள்கட்டமைப்பு மற்றும் நிதி தேவைப்படும்.

இந்திய பல்கலைக் கழகங்கள், உலக தர வரிசையில் பின்தங்கி உள்ளன. வேலூர் தொழில்நுட்பக் கழகம் தற்போது 500வது இடத்துக்குள் உள்ளது. உலகின் முதல் 100 அல்லது 200 இடங்களுக்குள் வர வேண்டும்

தமிழகத்தின் பின்தங்கிய பகுதியான வட ஆற்காடு மாவட்டத்தில், 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட 4 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பகுதியில், 10,000 மாணவர்களுக்கு உயர்க்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கறுப்புப் பணம், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகியவை தேசிய நோய்களாக உள்ளன. ஒவ்வோரு ஆண்டும் ரூ.8 முதல் 9 லட்சம் கோடி வரி ஏய்ப்பால் இழந்து வருகிறோம். ஊழலால் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

இந்தியர்கள் வெளிநாடுகளில், குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணம் உலக நாடுகளின் மொத்தப் பணத்தை விட அதிகமாக உள்ளது. கறுப்புப் பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை அகற்றிட மாணவர் சமுதாயம் போராட வேண்டும்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கு கல்வியின் வளர்ச்சி முக்கியமானது. இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,900 அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஆனால் ஜப்பானின் தனிநபர் வருமானம் 35,000 டாலர்களாக உள்ளது. உயர்க் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும் இவ்வாறு பேசினார்.இதனைத் தொடர்ந்து இவ்விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:

விஐடி பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுடன் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது. பின்தங்கிய மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு உதவும் பல்கலைக்கழகத்தின் பணி தொடர்ந்து வலுவடைய வேண்டும்.

குறிப்பாக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மேற்கொள் காட்டிய திருக்குறளின்படி, எந்தத் தொழிலிலும் நெறிமுறை நபராக மாற, மதிப்புகளின் அறிவு அவசியமாகும். ஒருமைப்பாடு இல்லாத வெற்றி உண்மையான வெற்றி அல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு பெருமளவில் அதிகரித்து வருகிறது. சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. உலகமயமாக்கல் மூலம் தொழில்நுட்பங்கள், முதலீடு ஆகியவற்றால் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த, மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து படித்து கொண்டே இருக்கும். புத்தகங்கள் தான் அறிவைப் பெருக்க உதவுகிறது.

ஒருவரின் நம்பிக்கையும், ஒழுக்கமும் குணத்தை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத் தலைவர்களாக மாற உள்ள மாணவர்கள் ஒழுக்கமான நடத்தை மற்றும் செயல்களின் எல்லைகளுக்குள் இருக்க உள் மனசாட்சியை வளர்க்க வேண்டுமெ பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெரும் பட்டம் தரும் பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இறுதியில் விஐடி பல்கலைக்கழக பதிவாளர் டி.ஜெயபாரதி நன்றியுரையாற்றி பட்டமளிப்பு விழா நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!