விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21 வது மரபு நடைபயணம்!!


விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய 21வது மரபுநடை பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் சிறப்பான ஒத்துழைப்புடன் திருவதிகை, திருகண்டேஸ்வரம்,எய்தனூர், திருமாணிக்குழி,திருவந்திபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள், என 70பேர் கலந்து கொண்டனர்.


 அவர்களுக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் த.ரமேஷ் மற்றும் ஆசிரியர் இரா.கமலக்கண்ணன் ஆகியோர் பயணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கோயிலை பற்றியும் தேவாரம் மற்றும் பிரபந்தங்களில் சொல்லப்பட்ட செய்திகள்,கோயில் கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டுகளில் உள்ள வரலாற்று தகவல்களை எடுத்துரைத்தனர்.மேலும் சில முக்கிய தகவள்களாக திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பல்லவர்கள் கட்டுவித்த கோயில் விமானத்தில் பொது ஆண்டு 1313ல் கேரள மன்னர் வீரகேரள  ரவிவர்ம குலசேகரன் கோவில் விமான அதிட்டானத்தை புதுப்பித்த செய்தியும், திருகண்டேஸ்வரம் ஊர் வடுவூர் என்றும் அங்குள்ள நடனபாதேசுவரர் சுவாமியை சோழர்காலத்தில். 


திருவடுவூர்மஹாதேவர்,திருக்கண்ணிஸ்வரர்மஹாதேவர் என்று அழைக்கப்பட்டதையும், அதன் அருகே உள்ள எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுவாமியை திருமாந்துறை ஆண்டார் என அழைக்கப்பட்டதை அங்குள்ள கல்வெட்கள் கூறுகிறது.அதனை அடுத்து திருமாணிக்குழி வாமனபுரிஸ்வரர் கோவிலில் விக்ரமசோழன் ஆட்சி காலத்தில் சோழர்கள் தன் குலதெய்வமாக சிதம்பர நடராஜரை வழிபட்டனர் என்பதை "தன் குல நாயகன் தாண்டவெம் புரியும்" என்ற சொற்றொடருடன் கல்வெட்டு அமைகிறது மேலும் அதே கோவிலில் இரண்டாம் குலோத்துங்க சோழன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் முடிசூடிய செய்தியாக "தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஶ்ரீகுலோத்துங்க சோழ தேவர்" என கல்வெட்டில் வருகிறது மேலும் அதன் அருகில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் இப்பகுதியை ஆண்ட காடவ குல மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் மூன்றாம் ராஜராஜசோழன் சேந்தமங்கலத்தில் சிறைவைக்கபட்டு அவனை மீட்க ஹொய்சாள மன்னன் வீரநரசிம்மன் படையனுப்பி மீட்ட செய்தியும் கல்வெட்டுகள் கூறுவதாக எடுத்துரைத்தனர்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக திருவதிகை ச.பிரகாஷ்ராஜ் மற்றும் சி.பாலாஜி ஆகியோர் செயல்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!