கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய். 167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவின் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். கே. என். நேரு!!
கோவை மாவட்டம்,கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், ரூ. 167.25 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்காவின் கட்டுமான பணிகளை அமைச்சர். கே. என். நேரு அவர்கள்இன்று நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில், உருவாகி வரும் செம்மொழிப் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து, செம்மொழி பூங்காவினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக இயக்குநர். ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள்,மாவட்டஆட்சித்தலைவர்.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். கே.ஈஸ்வரசாமி அவர்கள், மாண்புமிகு மேயர். கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர். மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர். ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள்.த.குமரேசன்,அ.சுல்தானா, மாநகர தலைமை பொறியாளர். விஜயகுமார், துணை தலைமைப் பொறியாளர். இளங்கோவன், மண்டலத்தலைவர். மீனாலோகு (மத்தியம்), பணிகள் குழுத்தலைவர். சாந்திமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நா.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர். தொண்டாமுத்தூர் ரவி, மாமன்ற உறுப்பினர். வித்யாராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக