நெமிலி அருகே மேல் களத்தூர் ஊராட்சியில் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேல்களத்தூர் ஊராட்சியில், 2023-2024 ஆம் நிதியண்டிற்கான 15வது நிதிக்குழு மான்ய நிதியிலிருந்து ரூ.1.26 கோடி மதிப்பீட்டில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 

இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர். பெ.வடிவேலு அவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மேல்களத்தூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள செல்வமந்தை, மேலேரி, காட்டுப்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்வீதி, மகேந்திரவாடி, எலத்தூர், மின்னல், அன்வர்திகான் பேட்டை உள்ளிட்ட 25000க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஜெயஸ்ரீ (வ.ஊ) சிவக்குமார் (கி.ஊ), மேல்களத்தூர் ஊராட்சிமன்ற தலைவர். சசிகலா, செல்வமந்தை ஊராட்சி மன்ற தலைவர். ஆறுமுகம் , மேலேரி ஊராட்சி மன்ற தலைவர். மனோகரன் , மேலேரி ஒன்றிய குழு உறுப்பினர். நீலாவதி ஏகாம்பரம், வட்டார மருத்துவ அலுவலர்கள். மேகலா, விக்னேஷ், மருத்துவ அலுவலர்கள். அருண்குமார், கார்த்திக், வட்டார சுகாதர மேற்பார்வையாளர். பாலன், சுகாதார ஆய்வாளர்கள். பூஞ்செழியன், மனோஜ் குமார், சந்தோஷ்குமார், பகுதி சுகாதார செவிலியர் தாயாரம்மாள், கிராம சுகாதார செலியர்கள், தீபா, ராணி, கபிதால், சோபனா, மற்றும் சுகாதார அலுவலர்கள் , நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிகள் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!