சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்!!
சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டார்.
அமைச்சர். கே. என். நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நமது துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்த வேண்டிய புதிய திட்டங்களின் விவரங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவானஞ்ஆலோசனைமேற்கொண்டார்.இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர்,
ராஜேந்திர ரத்னூ, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர், கே.விவேகானந்தன், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர், டாக்டர். டி.ஜி.வினய், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர், கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர், பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., பேரூராட்சிகளின் இயக்குநர், எம்.பிரதீப் குமார், இ.ஆ.ப., ஆகியோருடன் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக