கரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று கரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற அரசு நல உதவிகள் வழங்கும் விழாவில், 


வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, தாட்கோ என 16 துறை சார்ந்து, ரூ 162.22 கோடி மதிப்பிலான நல உதவிகளை, மொத்தமாக 18331 பயனாளிகளுக்கு வழங்கினார்..


இதில், தங்களின் பெரும் கனவான, விலையில்லா வீட்டு மனைப்பட்டாவை மட்டும், கரூர் வட்டத்தை சேர்ந்த 1820 பயனாளிகள், அரவக்குறிச்சி வட்டம் 2606 பயனாளிகள், மண்மங்கலம் வட்டம் 600 பயனாளிகள், புகழூர் வட்டம் 2498 பயனாளிகள், குளித்தலை வட்டம் 2078 பயனாளிகள், கிருஷ்ணராயபுரம் வட்டம் 1926 பயனாளிகள் மற்றும் கடவூர் வட்டத்தை சேர்ந்த 1596 பயனாளிகள் என 13124 பயனாளிகள் விலையில்லா வீட்டு மனைப்பட்டா பெற்றனர்..

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி,கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!