ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டம்!!

ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோஜாக் ) மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தலைமை நிலை செயலாளர் தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்சங்கம்ஸ்ரீதர்மாவட்ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெங்கடேசன். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சரவணன்,யோசுவா,தேவராஜன், ரோஸ் பேபி, மற்றும் மாநில மாவட்ட வட்டார பொதுக்குழு உறுப்பினர்கள். தலைமை வகித்தனர்.இந்தப்மறியல்போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர், டிடோஜாக். மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், சி, சேகர் பங்கேற்று மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

 

இந்தப் போராட்டத்தில்  தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய. ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்,. 

தொடக்கக் கல்விதுறையில்பணியாற்றும் பகுதிநேரஆசிரியர்கள்சிறப்புஆசிரியர்களுக்கு கால முறை  ஊதியம் வழங்கிட வேண்டும். போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம்  செய்தனர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.  இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!