சிதம்பரத்தில் நாளை மறுதினம் ஐயா. இளைய பெருமான் அவர்களின் திருவுருவ சிலை திறக்க வருகை தரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்!!


கடலூர் மாவட்டம், மாண்புமிகு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின்அவர்கள், வரும் 15ஆம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம்லால்புரத்தில்அமைக்கப்பட்டுள்ள ஐயா.L.இளையபெருமான் அவர்களின் திருஉருவ சிலையுடன் கூடியநூற்றாண்டு அரங்கத்தினை திறந்து வைக்க உள்ளார். 

அதைத் தொடர்ந்து, அரசு அலுவலர்களே மக்களின் இல்லங்களுக்கு சென்று மனுக்களை பெற்று தீர்வு காணும் உங்களுடன்_ஸ்டாலின் எனும் மகத்தான திட்டத்தையும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிதம்பரம் நகராட்சியில், தொடங்கி வைக்க உள்ளார். 

இதை முன்னிட்டு  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை மாண்புமிகு அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து  இன்று நேரில் ஆய்வு செய்து, அங்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் கே என் நேரு அவர்கள் ஆலோசனைவழங்கினார்.இந்நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!