அரக்கோணம் அருகே மிட்டப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மிட்ட பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் ஸ்டாலின்  நல திட்ட உதவி முகாம் நடைபெற்றது. மிட்டப்பேட்டை பெருமாள்ராஜ் பேட்டை சித்தாம்பாடி நந்தி வேடுதாங்கள் ஆகிய ஊராட்சி மக்களுக்காக நடத்தப்பட்ட இம் முகாமிற்கு மிட்ட பேட்டை  ஊராட்சி மன்ற தலைவர். ராதா ராஜன் தலைமை வகித்தார் திமுக ஒன்றிய செயலாளர்கள். ஆசிரியர். தமிழ்மணி மற்றும் வழக்கறிஞர் சௌந்தர் முன்னிலை வகித்தனர். 

முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர். நிர்மலா சௌந்தர் கலந்து கொண்டார். முகாமினை ஆய்வு நடத்தியவர் பின்னர் உதவித் தொகை கோரும் மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நல உதவிகளையும் பொது மக்களுக்கு வழங்கினார்.  முன்னதாக பொதுமக்களுக்காக உதவி மையத்தினை ஒன்றிய செயலாளர் ஆசிரியர். தமிழ்மணி திறந்து வைத்தார். முகாம் ஏற்பாடுகளை மிட்டப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர். ராதா ராஜன் கவனித்து கொண்டார்.

 

முகாமில் ஒன்றிய திமுக நிர்வாகிகள் குப்புசாமி, மூர்த்தி, சக்கரவர்த்தி, செல்வா, தூர்வாசலு, ராகுல், சுந்தரமூர்த்தி உட்பட மிட்ட பேட்டை ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் 15 துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!