அரக்கோணம் அருகே சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!



ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் அரும்பாக்கம், பரித்திபுத்துார், ஓச்சலம், சித்தேரி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். கலைஞ்செழியன் தலைமை தாங்கினார். பிடிஓ சிவக்குமார் முன் னிலை வகித்தார். அரக் கோணம் தாசில்தார். வெங்கடேசன் வர வேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக  மாவட்ட வருவாய் அலுவலர். தன லிங்கம், சப் கலெக்டர் வெங்கடேசன், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொது

மக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை பார்வை யிட்டனர். பின்னர் அதே வளாகத்தில் வேளாண்மை மற்றும் மருத்துவத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், ஊராட்சி மன்ற துணை தலைவர். தனசேகர், சயனபுரம் ஊராட்சி மன்ற  தலைவர். பவானி வடிவேலு, வார்டு உறுப்பினர்கள். ஆஷா, அருள், ஷீலா, வள்ளி, சிவகாமி, ரஞ்சித்குமார், அகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!