முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்!!



தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட உங்களுடன்_ஸ்டாலின் என்னும் உன்னத திட்டம் வாயிலாக இன்று கரூர் காதப்பாறை ஊராட்சியில், ராசி முருகன் மகாலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் காதப்பாறை ஊராட்சி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாவட்ட பொது மக்களுக்கு கரூர் மாவட்டத்தில் மட்டும் 179 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.. கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.. என கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!