கரூர் சட்டமன்றத் தொகுதி வாங்க பாளையத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!



கரூர் மாவட்டம்,மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களை நேசி' எனும் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்களை செயலாக்கும், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்கள், மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" என்னும் உன்னத திட்டத்தை, இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.. அதன் பொருட்டு இன்று கரூர் சட்டமன்ற தொகுதி, வாங்கப்பாளையத்தில் அமைந்துள்ள மண்டலம் 1 அலுவலகத்தில், கரூர் மாநகராட்சி வார்டு 4 மற்றும் 5 பகுதி மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்.

நவம்பர் மாதம் வரை நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் என மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புற பகுதி முகாம்களில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதி முகாம்களில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.. 

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!