அரக்கோணத்தில் நடைபெற்ற அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா! சங்க தலைவர் தலைமையில் குரு பூஜையுடன் அன்னதானம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆலயத்தின் அருகில் மாவீரர் அழகுமுத்துக் கோனின் 268 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு அரக்கோணம் நகர  யாதவர்கள் சார்பில்  நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இதற்காக ராதா ருக்மணி கிருஷ்ண சமேத ஆலயத்தில் சிறப்பு பூஜையும் அதைத் தொடர்ந்து அழகு முத்துக்கோனின் திருவுருவப் படம் திறந்து வைத்து  மரியாதை செலுத்தியபின் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காலை சிற்றுண்டி  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரக்கோணம் யாதவர் நலச்சங்கம் தலைவரும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியுமான வெங்கடேசன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள். சக்கரவர்த்தி, துரை, பாண்டியன், கேவி. ரவிச்சந்திரன், பொன். கோகுல், ராம்சுரேஷ் , கோகுல் மணிவண்ணன், ராஜா, ஜெயக்குமார் மற்றும் லோகநாதன் உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!