பண்ருட்டி மக்களுக்கு ஒரு நற்செய்தி!!

கடலூர் மாவட்டம், முதல் முறையாக பண்ருட்டியில் இருந்து ஹைதராபாத்துக்கு நேரடி சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் நின்று செல்லும்.வண்டி எண் 07191 திங்கட்கிழமை இரவு 8:30-க்கு கச்சிகுடாவிலிருந்து புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 4:43-க்கு பண்ருட்டி வந்து புதன்கிழமை 01:20 க்கு மதுரை செல்லும்.

அதேபோல மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 புதன்கிழமை காலை 10:40-க்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 6:03-க்க பண்ருட்டி வந்து வியாழக்கிழமை மதியம் 1:25-க்கு கச்சிகுடா செல்லும்.

இந்த ரயில் ஷாட்நகர், ஜாட்செர்லா, மஹ்பூப் நகர், வானாபார்டி ரோடு, கட்வால் ஜங்ஷன், கர்னூல் சிட்டி, தோனே ஜங்ஷன், கூட்டி ஜங்ஷன், அனந்தபூர், தர்மாவரம் ஜங்ஷன், கடிரி, மதனபள்ளி ஜங்ஷன், பிலேர், பாகலா ஜங்ஷன், சித்தூர், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!