பெ. வடிவேலு தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் திரள வேண்டும் என்று, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பை அறிவித்து, கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டுமென்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 


அதன் அடிப்படையில், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சித்தேரி கிராமத்தில் இத்திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். 


நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் மொத்தம் 49 கிளை கழகங்கள் உள்ளன. இவற்றில் 27,541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 சதவீத வாக்காளர்கள், அதாவது 13800 வாக்காளர்களை இந்த முன்னெடுப்பின் மூலம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியது. அதன்படி நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் இதுவரை 50% சதவீதத்தையும் கடந்து உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையின் போது, கழக நிர்வாகிகள், புருஷோத்தமன் சின்னப்பா, செந்தில், குருநாதன், குப்புசாமி, கபாலி, ஜெகதீசன், கோமதி உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!