அரக்கோணம் டிஆர்எஸ் குளோபல் பள்ளி மாணவதலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே டிஆர்எஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்றனர். இவர்களுக்கான தலைவர் மற்றும்செயலாளர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் 40 பேர் போட்டியிட்டனர் இவர்களில் 16பேர் தேர்ந்தெடுக்க பட்டனர் இவர்களில் பள்ளி மாணவர் தலைவராக அபினவ்.டி மாணவி தலைவராக அ.கபிலயா கேத்திரீனா உதவி மாணவர் தலைவராக சிவபிரசாத். எல் உதவி மாணவி தலைவராக பெல்லம் ரமேஷ் சிவாணி விளையாட்டு செயலாளராக இஷான் சுண்டி உதவி விளையாட்டு செயலாளராக
வி.லோகிதா கலாச்சார செயலாளர். சாதனா. உதவி கலாச்சார செயலாளர் முகமது அஜ்மல்.எம் மற்றும் மார்ஸ்- கேப்டன் ஜெ. தினேஷ் குமார்
மார்ஸ்- துணை கேப்டன் தோஷிகா.எஸ் வீனஸ்-கேப்டன் சுனில் குமார்.வீனஸ்-துணைத் கேப்டன் சுதிக்ஷா.கே வியாழன்- கேப்டன் சா.புகழேந்தி வியாழன் துணைத் கேப்டன் எஸ்.ஷமிதா மெர்குரி- கேப்டன் முகமது ரிஸ்வான் அலி மெர்குரி-வைஸ் கேப்டன் அமிர்தா.டி ஆகியோர் பொறுப்பேற்றனர். முன்னதாக விழாவிற்கு பள்ளி முதல்வர். கவிதா தலைமை வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக நெமிலி
காவல் ஆய்வாளர். எஸ்.விஜயலட்சுமி கலந்து கொண்டார். பெற்றோர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை நிர்வாக அலுவலர் சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.





கருத்துகள்
கருத்துரையிடுக