கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்! ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 19.7.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், கடலூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் அளிக்கும் சிவில் புகார்களை விசாரித்து சட்டப்படியான தீர்வு வழங்க அரசு வழக்குரைஞர்கள், வருவாய்துறை, நில அளவை துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில், சிவில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள், நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு சட்டப்படி அனைத்து துறைகளுடன் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை நன்னடத்தை காக்க பிணையம் பெறுதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்.N. கோடீஸ்வரன், V. ரகுபதி, அரசு வழக்கறிஞர்கள் கௌதமன், கோவர்த்தன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக