கோயில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கோவை மாவட்டம்,புதுமைப்பெண் திட்டம் மூலமாக பல லட்சம் மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கிடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்கவும், திராவிட மாடல் நல்லாட்சி தொடரவும், 'ஓரணியில் தமிழ்நாடு' என புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, இன்று கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் கழக மாணவரணி செயலாளர். இரா. ராஜீவ்காந்தி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர். தளபதி.முருகேசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக