திருச்சி பஞ்சப்பூரில் புறநகர் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர். கே. என். நேரு!!

தமிழ்நாட்டின் பேருந்து சேவையை பரவலாக்கும் விதமாக நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் திறந்து வைக்கப்பட்ட "முத்தமிழறிஞர் கலைஞர்  ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில்" பயணிகள் பயன்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் சேவைகளை அமைச்சர் கே என் நேரு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் மூலம்  தமிழ்நாடு போக்குவரத்து துறை ஒரு புதிய உயரத்தை எட்டும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என அமைச்சர். கே. என். நேரு அவர்கள் தெரிவித்தார்.

இதனையடுத்து, பேருந்து முனையத்தின்  செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ததுடன், பேருந்து நிலையத்தை தினசரி கண்காணிக்கவும்  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர். வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையர். காமினி இ.கா.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர்.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர். லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. தீபிசானு இ.ஆ.ப., அவர்கள், துறையூர் சட்டமன்ற உறுப்பினர். செ.ஸ்டாலின் குமார் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் நிர்வாக இயக்குநர்.க.தசரதன் அவர்கள், மண்டல பொது மேலாளர்கள். சிங்காரவேலன், .சதீஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் .ர.ராஜலட்சுமி ஆகியோருடன் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்ததுறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!