திருவாரூரில் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். கே .என். நேரு!!



திருவாரூர் நகரின் மையப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, நவீன தமிழ்நாட்டின் சிற்பி நம் "முத்தமிழ் அறிஞர் கலைஞர்" அவர்களின் திருவுருவ சிலையை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி சிலை நிறுவப்பட்டு உள்ள இடத்தை மாண்புமிகு அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுடன் இணைந்து அமைச்சர். கே. என். நேரு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.


அதைத்தொடர்ந்து திருவாரூர் எஸ்.எஸ்  நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும்  பந்தல் அமைக்கும் பணி - மேடை அலங்காரம் - பார்வையாளர்கள் அமரும் பகுதி - வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அப்போது, திருவாரூர் மாவட்ட செயலாளர் -  சட்டமன்ற உறுப்பினர். பூண்டி கலைவாணன் அவர்களுடன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

திருவாரூர்மாவட்ட செய்தியாளர் சுபாஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!