அரக்கோணம் அருகே பாராஞ்சி கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் சுவாமிக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா!!
இராணிப்பேட்டைமாவட்டம்.அரக்கோணம் வட்டம்,பாராஞ்சிகிராமத்தில்நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வத்யம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளதுஇங்கு .ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா பரம்பரை ஆலய அர்ச்சகர்கள், சுவாமிநாத குருக்கள், ஜெகதீச குருக்கள்,சுந்தரமூர்த்தி குருக்கள்,குகப்பிரகாஷ் குருக்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சமிபத்தில் ஸ்ரீ அகஸ்திய சிஷியால் பிரதிஷ்டைசெய்யப்பட்டதிருக்கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ஸ்ரீ பார்வத்யம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமி ஆலய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முதல்நிகழ்ச்சியாக பாதாளத்தம்மனுக்குசிறப்புஅபிஷேகத்துடன். விழா தூங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, கோ . பூஜைகளும் தினமும், நடைபெறும் தீபாராதனை. இரண்டாம் காலயாக பூஜை,மூன்றாம் கால யாக பூஜை நான்காம் கால யாக பூஜையுடன் மஹா பூர்ணஹுதி, தீபாராதனை, நிகழ்ச்சிக்குப் பின் , கலசங்கள் புறப்பட்டு.அனைத்து கோபுரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரசாதங்களும் ,அன்னதானமும் வழங்கபட்டது.
ஆலயத்திற்கு சிறப்பு விருந்தினராக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன் சோளிங்கர். எம். எல். ஏ.முனிரத்தினம் மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். வினோத் காந்தி சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் G.சம்பத் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்.சிவா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இவர்களை சோளிங்கர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர். வக்கீல். சௌந்தர் மற்றும் அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர். நிர்மலா சௌந்தர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர். அம்பிகா பாபு சோளிங்கர் கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர். உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் பொதுக்குழு உறுப்பினர்கள். கிருஷ்ணன், சிட்டிபாபு, ரமேஷ் செயல் அலுவலர். .குமுதா ஒன்றிய குழு உறுப்பினர்கள்.குமார், பிரசாத், பெருமாள், ராமன், குருக்கள் ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.







கருத்துகள்
கருத்துரையிடுக