அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் பரம்பராபள்ளி சார்பில் நடைபெற்ற மருத்துவர்கள் தின விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் விழா! மருத்துவர்கள் செவிலியர்களுடன் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பர சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தியது பள்ளி துணை முதல்வர் அகஸ்டின் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மருத்துவர் சீருடை அணிந்து கலந்து கொண்டனர் மேலும் ஆசிரியர்கள் பிரதீபா, சரண்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் தலைமை மருத்துவர். டாக்டர். நிவேதிதாசங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அன்னை தெரேசா நிறுவனத்தின் ஆலோசகர். S.ஜேக்கப் அரக்கோணம் இரயில் உபயோகிப்போர் சங்க தலைவர். நைனாமாசிலமணி சமுக ஆர்வலரும் மனித நேய கட்சி மாவட்ட செயலாளருமான முகமதுஅலி குளோ டிரஸ்ட் இயக்குனர். ஜேம்ஸ் மருத்துவர்கள். கனேசன், ரேவதி, உமாமகேஸ்வர் உள்பட இளம் மருத்துவர்கள் செவிலியர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக