அரக்கோணம்அரசு மருத்துவ மனையில் நடைபெற்றமருத்துவர்கள் தின விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் விழா! அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கொண்டாட்ட பட்டது இதனை முன்னிட்டு  தலைமை மருத்துவர். டாக்டர். நிவேதிதாசங்கர்  தலைமை தாங்கினார். குழந்தை நல   மருத்துவர். ரெஜினா முன்னிலை வகித்தார்

நிகழ்ச்சிக்கு அன்னை தெரேசா நிறுவனத்தின் ஆலோசகர். S.ஜேக்கப் வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்தும் வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அரக்கோணம் இரயில் உபயோகிப்போர் சங்க தலைவர். நைனாமாசிலமணி சமுக ஆர்வலரும் மனித நேய கட்சி மாவட்ட செயலாளருமான முகமதுஅலி குளோ டிரஸ்ட் இயக்குனர்.  ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். 

மருத்துவர்கள் கனேசன், ரேவதி, உமாமகேஸ்வர் உள்பட இளம் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இளம் மருத்துவர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சிக் ஏற்பாடு செய்த நிறுவன  ஒருங்கிணைப்பாளர்.  டி.சாம்ராஜ்  அனைவருக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக பரம்பர சிபிஎஸ்இ மெட்ரிக் செகண்ட்ரி பள்ளி சார்பில்  தேசிய மருத்துவர் தினம் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளி துணை முதல்வர். அகஸ்டின் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மருத்துவர் சீருடையில் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள். பிரதீபா, சரண்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கேக் வெட்டிஅனைவருக்கும் வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!