நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்! அமைச்சர். ஆர்.காந்தி பங்கேற்பு!!



ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலேரி. செல்வமந்தை, கீழ்விதி. எலத்தூர்,கீழ்களத்தூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி மேலேரி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர். சந்திரகலா தலைமை வகித்தார் ஊராட்சி மன்ற தலைவர்கள். மனோகரன், ஆனந்தி செல்வம், ஆறுமுகம், ஷோபனா, குமார் முன்னிலை வகித்தனர்.நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் நீண்டவரிசையில் விண்ணப்பத்துடன் காத்திருந்தனர். இதை பார்த்த அமைச்சர்.ஆர். காந்தி  இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். உங்களுக்கு முகாம் நடத்துவது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டதா? அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளீர்களா? தகுதியான மகளிர் எல்லோருக்கும் உரிமை தொகை கிடைக்கும் என்றார். அதைத்தொடர்ந்து முகாமில் பட்டா பெயர் மாற்றம் செய்து தந்தமைக்கான உத்தரவு நகல் மற்றும் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட பட்டா பெயர் மாற்றம் குறித்து மனு தந்தவருக்கு உதவிகளை பயனாளிகளுக்குநெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ.வடிவேலு, அமைச்சர்.ஆர். காந்தி வழங்கினார். 


முகாமில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள். ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி.பெருமாள். தெற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், கீழ் வீதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சிவகாமிநாதன், திமுக ஒன்றிய அவைத்தலைவர்கள் நரசிம்மன், பிரகாஷ், பொன்னுரங்கம், துணை செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் சம்பத், மணிகண்டன் மற்றும் வேளாண், மின்சாரம், வருவாய், ஆதிதிராவிடர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன் மகளிர் உரிமை தொகை மனுக்களை பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!