பெ.வடிவேலு தலைமையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு, இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை குறித்து, பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மற்றும் பாகமுகவர்களுக்கான பயிற்சி கூட்டம்! நெமிலி ஒன்றிய திமுக கழக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர், வினோத்காந்தி, அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு, பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மற்றும் பாகமுகவர்களுக்கு இணைய வழியில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பயிற்சி வழங்கினர். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மாபெரும் முன்னெடுப்பான ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்தும் விளக்க உரையாற்றினர்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை குறித்த கழக நிர்வாகிகளின் கேள்விகளுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் உரிய விளக்கங்களை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர். சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர். கண்ணையன், மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான், இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர். ஆதிசேஷன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சிவா, டான் போஸ்கோ, ராகுல், யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் புருஷோத்தமன், அப்துல் ரகுமான், பாண்டியன், அரிகிருஷ்ணன், பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.




கருத்துகள்
கருத்துரையிடுக