காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 10.7.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். K. கோடீஸ்வரன், V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த மே மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள்.ராஜா, ரூபன்குமார், காவல் ஆய்வாளர்கள். வேலுமணி, கதிரவன், அம்பேத்கர், தேவேந்திரன், உதவி ஆய்வாளர்கள். பிரேம்குமார், தங்கவேல், உலகநாதன், கணபதி, பிரகாஷ், அமிர்தலிங்கம், ஆனந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 53 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.






கருத்துகள்
கருத்துரையிடுக