ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொது சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!!

                                   


ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர். இருதய மேரி தலைமை வகித்தார்.மாவட்டத் துணைத் தலைவர்.நிர்மலா மாவட்ட செயலாளர். ராஜேஸ்வரி  மாவட்ட பிரச்சார செயலாளர். திலகவதி, பிரச்சார் செயலாளர். ஷெல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ஜான்சி சர்மிளா ஜாய்ஸ்,ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

1, துணை சுகாதார மையங்களில் MLHP மணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

2, துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களான MLHP களை தடுப்பூசி பணியில்

 ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

3, கொரோனா லாக் டவுன் காலத்தில் போக்குவரத்தும் இல்லாத சூழலில் ஒவ்வொரு நாளும் ரூ, 500 முதல் ஆயிரம் வரை சொந்த ஊதியத்தில் இருந்து செலவு செய்து கிராம சுகாதார செவிலியர்களும் பகுதி சுகாதார செவிலியர்களும் பனிக்களத்திற்கு  சென்றனர், இரவு பகல் பாராது ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இன்றி கொரோனா தடுப்பூசி பணி உட்பட அனைத்து கொரோனா பணியிலும் ஈடுபட்டோம்.

பெண் ஊழியர்கள் என்பதால் அதிக பணிச்சுமை பிற பணியாளர்களின் பணியை திணிப்பது, மெமோ, சஸ்பென்ஷன், என்று அச்சுறுத்தல் போன்ற பாலியல் பாகுபாட்டை கைவிட வேண்டும். போன்ற 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!