பண்ருட்டி அருகே சிறு கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கம்!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகில் உள்ள சிறு கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை கடலூர் மாவட்டத்தினால் திருக்குறள் கருத்தரங்கம்  வெகு சிறப்பாக நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர். உமாசங்கர் அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர். பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியை கல்பனா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர். தமிழ் அரிமாப.மொ. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்து கருத்தரங்கை ஒருங்கிணைப்பு செய்தார்கள். தமிழ் அரிமா பா.மொ. பாஸ்கரன் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் சான்றிதழ்களையும் பரிசாக வழங்கி பாராட்டினார். திருக்குறளில் முக்கியத்துவத்தையும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருவாரியாககலந்துகொண்டனர்.இறுதியாக ஆசிரியர் முத்தமிழ் அவர்கள் நன்றி கூற விழா! தேசிய கீதத்துடன் இனிது முடிவுற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!